Sunday, November 10, 2013

என் வயது 28...

என் வயது 28. ஆங்கிலப் பள்ளியில் ஆயா வேலை செய்து வருகிறேன். எனக்கு திருமணம் ஆகி, 12 வருடங்கள் ஆகிறது. நானும், என் கணவரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். பத்தாம் வகுப்பு படிக்கும் போது, 15 வயதிலேயே திருமணம் செய்து கொண்டேன். எனக்கு மூன்று பெண் குழந்தையும், கடைசியாக ஒரு ஆண் குழந்தையும் உண்டு. பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து, நாங்கள் இருவர் மட்டுமே சொந்தம் பந்தம், தாய், தந்தை என்று வாழ்ந்து வந்தோம்.
என் போதாத காலம்... என் மகன் பிறந்த நேரத்தில், என் கணவருக்கு தொண்டையில் புற்று நோய் ஏற்பட்டு, ஆறு மாதங்களில் இறந்து விட்டார்.
என் பெற்றோர், என் கணவன் சாவுக்கு கூட வர மறுத்து விட்டனர். என் கணவர் வீட்டினரும் எங்களை கவனிப்பது கிடையாது. எனக்கு தெரிந்தவர்களின் உதவியுடன், நான்கு ஆண்டுகளாக, ஒரு பள்ளியில், ஆயா வேலை செய்து வருகிறேன்.
அடுத்த தெருவில் குடியிருக்கும், என் சின்ன மாமியாரின் மகன், அடிக்கடி வந்து, எனக்கு ஆறுதல் கூறுவது வழக்கம். அவருக்கு வயது 25. அவர் அன்பு, ஆறுதல், நாளாக நாளாக, அனைவரும் எங்களை தவறாக பேசும்படி செய்து விட்டது. அனைவரும் எங்களை இணைத்து பேசினர்.
'அனைவரும் நம்மை இணைத்து பேச ஆரம்பித்து விட்டனர். அது உண்மையாகவே இருக்கட்டும். நான் உங்களுக்கு ஆறுதல் தருகிறேன்...' என்று பழக்கத்தை தொடர்ந்தார்! நான் சிறு வயதாக இருப்பதாலும், கணவரை இழந்து, நான்கு வருடம் தனிமையிலிருந்ததாலும், என் கொழுந்தனாரை விரும்பினேன். அவர் மேல், அளவு கடந்த அன்பு வைத்து, இவ்வுலகமே, அவர் தான் என்று வாழ்ந்து வருகிறேன்.
தற்போது, என் மனசாட்சி, குத்திக் கொண்டே இருக்கிறது. ஒரு திருமணமாகாதவரின் மனதை கெடுத்து விட்டோமே என்று. நாம் திருமணமாகி குழந்தைகளை பெற்று விட்டோம். அவர், அதை அடையவில்லை. ஊர் கேவலமாக பேசுமே என்று அஞ்சுகிறேன்.
மேலும், நாங்கள் வாழ்க்கையில் இணைவதால், என் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்குமே என்று எண்ணி வேதனைப்படுகிறேன். என் குழந்தைகளுக்காக அவரை மறந்து விடுவது நல்லதா அல்லது அவரோடு சேர்ந்து வாழ்வதா என்று புரியாமல், யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கிறேன்.
நான், அவரை பிரிந்து, என் குழந்தைகளுக்காக வாழ்வேன்; அவரால், இருக்க இயலாது. எனவே, எங்கள் வாழ்க்கைக்கு ஒரு நல்ல வழியை கூறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்பு தங்கைக்கு
உன் கடிதம் கிடைத்தது. நான்கு குழந்தைகளுடன், 28 வயதிலேயே கணவனை இழந்து, ஆதரவற்று நிற்பது தாங்க முடியாத சோகம் தான்...
ஆனாலும், எப்பேர்பட்ட துக்கத்தையும், காலம் ஆற்றி விடும் வரத்தை, கடவுள், நமக்களித்திருக்கிறார். சரி... உன் விஷயத்துக்கு வருவோம்.
படர்வதற்குப் பந்தல் இல்லாத கொடி, எதன் மீதாவது, தொற்றிப் படர்வது இயற்கைதான்... 28 வயதில் நிற்கும் உன்னை, இப்போது, உனக்கு கிடைத்திருக்கும் துணையை உதறு என்று நான் கூறினால், அது உனக்கும், உன்னுடைய காதலருக்கும் எரிச்சலாகக் கூட இருக்கும்.
ஆனால், என் அன்புத் தங்கையே... நீ, இதே வயதில், குழந்தை ஏதுமில்லாமல், கணவனை இழந்து நின்றால், 'சரி, உனக்கும் பிடித்திருந்தால் மறுமணம் செய்... தப்பே இல்லை' என்று, நான் சொல்லியிருப்பேன்...
நம் நாடு இருக்கும் நிலையில், இரண்டாவது குழந்தையே அதிகம் என்று, ஒரு குழந்தையோடு குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளும் கால கட்டத்தில் நீ, நாலு குழந்தைகளைப் பெற்றிருக்கிறாய். உன் காதலன், இப்போது உன் மீதுள்ள ஆசையினால், உன் நாலு குழந்தைகளையும், தன் குழந்தைகளாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒரு நாள், நமக்கென்று ஒரு குழந்தை இல்லையே என்ற ஏக்கம், வார்த்தைகளில் வெடிக்கலாம்...
அப்படியெல்லாம் சொல்லக் கூடியவர் இல்லை என்கிறாயா... மனம் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை கண்ணம்மா... நிமிடத்துக்கு நிமிடம் மாறும். அவர் சொல்லக் கூடியவர் இல்லாவிட்டாலும், என்றாவது ஒரு நாள், - அலுப்பில், களைப்பில் அல்லது உண்மையிலேயே குழந்தைகளின் நலனில் ஏற்பட்ட அக்கறையில், உன் புதுக் கணவர் உன் குழந்தைகளைக் கடிந்து ஒரு வார்த்தை சொன்னாலும், உன்னால் அதைத் தாங்க முடியாது...
'இதுவே உங்க குழந்தையின்னா இப்படி சொல்லுவீங்களா?'
- இப்படிப்பட்ட பேச்சுகளுக்கெல்லாம், இடம் அளிக்க வேண்டி வரும்.
அதுமட்டுமில்லை, நீங்கள் இருவருமே ஒருவரையொருவர் நன்கு புரிந்து வாழ்ந்தாலும், உன் குழந்தைகள் வளர்ந்து, ஆளாகும் போது, உன்னையும், அந்தப் புது அப்பாவையும் மனதார அங்கீகரிக்க வேண்டும்...
'எங்களைப் பத்தி கொஞ்சமும் அக்கறையில்லாம உன் வாழ்க்கை பெரிசுன்னு இன்னொருத்தரை சேர்த்துகிட்டவதானே நீ...'
- இப்படியொரு சொல், பெற்ற குழந்தைகளின் வாயிலிருந்து வந்தால், எந்த பெண்ணும் தாங்க மாட்டாள்... என்னதான் காலம் மாறினாலும், பெண்களுக்கு சுதந்திரமும், உரிமையும் கிடைத்தாலும், மனதளவில் நம் பொறுப்புகளிலிருந்து நழுவி விடக் கூடாது சகோதரி... எதிர்பார்ப்பின்றி அன்பைக் கொடுப்பது, பெற்றவள் ஒருத்தி தான்.
அந்தப் பெற்றவளும், தனக்கு சொந்தமில்லை என்று நினைக்கும் போது, -அந்தக் குழந்தைகளின் மனசு என்ன பாடுபடும் என்பதை, கொஞ்சம் யோசித்து பார். உன் காதலனுக்கு, வேறொரு நல்ல மனைவி கிடைப்பாள். ஆனால், உன் குழந்தைகளுக்கு உன்னைப் போல், பாசத்தைத் தருகிற, இன்னொரு தாய் கிடைக்க மாட்டாள்.
ஆதலால், இக்கடிதத்தை, அவருக்கும் படிக்கக் கொடு.
நாளைக்கு, உங்களது இந்த சிறு சபலத்தினால், உன் மூன்று பெண்களின் வாழ்க்கையிலும் கேள்விக்குறிகள் முளைப்பதை இப்போதே தடுத்து விடு. ஆம்... உன் பெண்களுக்கு வருகிற கணவர்களுக்கு, தங்கள் மனைவியை வார்த்தையால் குத்த, நீதான் ஊசியாய் பயன்படுவாய்... அவர்களுடைய காலத்தில், இதெல்லாம், ஒரு பெரிய விஷயமாக இல்லாமல் போனாலும் போகலாம்... ஆனால், 'இவ அம்மா...' என்று, யார் உன்னைப் பற்றி பேசினாலும், உன் குழந்தைகள் கூசிக் குறுகிப் போவர்.
உடலின் தேவைகளைப் புறக்கணிப்பது அத்தனைச் சுலபமல்லதான். 'இப்படி இச்சைகளை அடக்குவதால், - நடு வயதுப் பெண்கள், பல விதமான மன நோய்களுக்கு ஆளாகின்றனர்...' என்று, மனோதத்துவ மேதைகள் சிலர் சொல்லலாம். ஆனால், எதற்கும் ஒரு மாற்று உண்டு.
அந்தக்காலத்தில், இளம் விதவைகள், தங்களது முடியுடன் கூட, ஆசையையும் மழித்துக் கொண்டு, வெள்ளைப் புடவை உடுத்தி, அடுப்படியோடும், பூஜை, புனஸ்காரத்தோடும் தங்களைத் தாங்களே தேய்த்துக் கொண்டனர்... இப்படிப்பட்டவர்களுக்குத் தான், புது மணத்தம்பதிகள் அல்லது நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களைப் பார்க்கையில் ஆத்திரம், அழுகை, அசூயை எல்லாம் வரும்.
இப்போது, அந்த நிலை மாறி விட்டது. ஒரு கதவு முடினால், இன்னொரு கதவு உனக்காகத் திறக்கக் காத்திருக்கிறது.
ஆமாம். இன்று உனக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கையை, சாதனைக்கான பாதையாக மாற்றப் பார். ஆயா வேலை பார்க்கும் நீ, உனது பள்ளி இறுதிப் படிப்பை வீட்டிலிருந்தபடியே படிக்கலாம். ஆசிரியை பயிற்சி பெற்று, சிறந்த ஆசிரியை ஆகலாம். நன்றாக உழைத்தால், 'நல்லாசிரியை' விருது கூட வாங்கலாம். உருப்படியாகச் செய்ய இந்த உலகில் எத்தனை இருக்கிறது தெரியுமா?
ஒன்றை இழந்தால்தான், மற்றொன்றை பெற முடியும்.
நிச்சயம் முடியும்.
- என்றும் தாய்மையுடன்

Friday, October 25, 2013

என் மனைவியை நான் விசாரிக்கையில், அவர்கள் தொடர்பு நீடித்ததாகவும்...

என் வயது 51. என் மனைவியின் வயது 43. வயதுக்கு வந்த ஒரு பெண்ணும், ஆணும் இருக்கின்றனர். இருவரும் படித்து வருகின்றனர். நான் அரசு வேலையிலும், என் மனைவி இல்லத்தரசியாகவும் இருக்கிறாள்.
நான், என் மனைவியை காதலித்து மணந்தவன். ஐந்து வருடம் குழந்தை இல்லாமல் இருந்து, இருவரும் சிகிச்சை எடுத்துக் கொண்ட பின், இரு குழந்தைகள் பிறந்தனர்.
குடும்ப நண்பர் ஒருவர் உருவில், எங்கள் வாழ்வில் புயல் நுழைந்தது. அவரும், என் மனைவியும் பழகியது நட்பு முறையில் என்று எண்ணிய எனக்கு, இரு குழந்தைகள் பிறந்த பின்னர், அவரும், என் மனைவியும் எழுதிக் கொண்ட கடிதங்களை பார்க்க நேர்ந்தது. அப்போது தான், அவர்கள் நட்பு, எல்லையை மீறியது தெரிய வந்தது. என் மனைவி, நகை மற்றும் பணம் அவருக்கு கொடுத்து இருப்பதும் தெரிய வந்தது. 
இது தெரிந்து, என் மனைவியை நான் கண்டித்த போது, அவர்கள் நட்பு, எல்லை மீறியது ஒரு முறைதான் (முத்தமிட்டது) என்றும், இனி தவறுகள் ஏற்படாமல் இருப்பதாகவும் உறுதி அளித்தாள். 
நானும், பணம், நகை இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை. குடும்ப பெயர் கெடக் கூடாது எனக் கூறி, அவர்கள் இருவரும் இனி பழக வேண்டாம் எனத் தடுத்து விட்டேன். அவளும் உறுதி அளித்ததால், முழு சுதந்திரம் கொடுத்தேன்.
இதன்பின், என் அலுவல் விஷயமாக நான் வெளிநாடு செல்ல நேர்ந்தது. ஐந்து வருடங்கள். மனைவி, குழந்தைகளை அழைத்துப் போக முடியாத சூழல். மீண்டும் தாயகம் திரும்பியதும், இன்னும் ஒரு அதிர்ச்சி... என் மனைவியும், நண்பரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், எழுதிய டயரி குறிப்புகள், எதேச்சையாக என் பார்வையில் சிக்கியது. 
இது குறித்து மீண்டும் என் மனைவியை நான் விசாரிக்கையில், அவர்கள் தொடர்பு நீடித்ததாகவும், அவர்கள் காதலித்ததாகவும், முன்று முறை உடலுறவும் கொண்டதாகவும் கூறி, ஆயினும் என் மேல் இருக்கும் அன்பு, இதனால் பாதிக்கக் படாது என்றும் கூறினாள்.
நான் பார்க்கக் கூடாது, பேசக் கூடாது என்று கூறியும், அதை மீறியதற்கு எந்த வருத்தமும் அடைந்ததாகத் தெரியவில்லை. நான் இதுபற்றி கேட்டபோது, அந்த நண்பர் இப்போது உயிரோடு இல்லை என்றும், எனவே இந்த வயதில் இவற்றை பற்றி பேசுவதும், நடந்து போன, முடிந்து போன சம்பவங்கள் பற்றி நினைப்பதும் வேண்டாத ஒன்று எனத் தெரிவித்து விட்டாள்.
இந்த சம்பவங்கள் தெரிய வந்ததில் இருந்து, மன அமைதி இன்றி நடைப்பிணமாக வாழ்கிறேன். வயது வந்த குழந்தைகள் இருப்பதால், எந்த அதீதமான முடிவும் எடுக்காமல் என்னை நானே சமாதானம் செய்து வருகிறேன்.
என் மனைவியோ, என் வயதான பெற்றோர், என் குழந்தைகள் மற்றும் எனக்கும் தன் கடமையில் இருந்து தவறவில்லை. மனைவி என்ற அளவில் வேண்டுமானால், அவளின் வெளித் தொடர்பு தவறாக இருக்கலாம் என்றும், ஆயினும் எப்போதும் என்னை விட்டுப் போக மாட்டேன் என்றும் கூறி, இவற்றை எல்லாம் மறந்து விடச் சொல்கிறாள்.
மறப்பதற்கும், மன்னிப்பதற்கும் நான் மகாத்மா அல்ல. அதே நேரம், மறக்காவிட்டால், இந்த நினைவுகள் என்னைத் தான் பாதிக்கும் என்றும் தெரிகிறது. இந்த வயதில் குழந்தைகள் நலன், என் அந்தஸ்து இவற்றால், அவளை துறக்கவும் முடியாது. என் காதலும் அந்த முடிவை அங்கீகரிக்காது. இருதலைக் கொள்ளி எறும்பாக உணர்கிறேன்.
உண்மையான காதலுக்கு, பெண்கள் அளிக்கும் கவுரவம் இதுதானா... சுதந்திரம் அளிக்கும் ஆண்கள் எல்லாம் முட்டாள்களா? என்னை அமைதிப்படுத்திக் கொள்ள, நான் என்ன செய்ய வேண்டும்? 
இப்படிக்கு,
அன்பு சகோதரன்.


அன்புள்ள நண்பருக்கு— 
உங்கள் கடிதம் கிடைத்தது. படித்து மிகவும் வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்.
நீங்கள், உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல, எல்லாப் பெண்களும் உண்மையான காதலை இப்படி மட்டம் தட்டுவதில்லை; பெண்களுக்கு சுதந்திரம் அளிப்பது தவறும் இல்லை. நீங்கள் எல்லை மீறிய விரக்தியில், இப்படியெல்லாம் எழுதியுள்ளீர்கள்.
நண்பரே... என்றைக்கு உங்கள் மனைவிக்கும், அந்தக் குடும்ப நண்பருக்கும் தனிப்பட்ட முறையில் ஈடுபாடு இருப்பது தெரிய வந்ததோ, அப்பொழுதே நீங்கள் அவளை முழுசாக உங்கள் பக்கம் திருப்பி இருக்க வேண்டும். அவளது மனம் எதனால் அல்லது எதைக் கண்டு அந்தப் பக்கம் அலைபாய்கிறது என்பதைக் கூர்ந்து கவனித்து, அவள் மனசை மாற்றியிருக்க வேண்டும். அல்லது அந்தக் குடும்ப நண்பருக்கு தகுந்த எச்சரிக்கை கொடுத்து, அப்புறப்படுத்தியிருக்க வேண்டும்.
இதற்கெல்லாம் கண்டித்தோ, வாக்குறுதி வாங்கியோ ஒரு பயனுமில்லை. பல சமயத்தில், பல விஷயங்களை நேருக்கு நேர் நின்று மோதுவதைக் காட்டிலும், மறைமுகமாக மோதி, தீர்வு காணுவதுதான் புத்திசாலித்தனம்.
நீங்கள் கேரம் போர்டில் விளையாடி இருக்கிறீர்களா... பாக்கெட்டுக்கு நேராக இருக்கும் காய்களை அடித்து உள்ளே தள்ளுவது பெரிய விஷயமில்லை. நாம் அடிக்க வேண்டிய காய் எதிர்ப்பக்கம் நட்ட நடுவில் இருக்கும். அதை பாக்கெட்டுக்குள் தள்ள, ஸ்டிரைக்கரை இடதுபக்கம் அல்லது வலது பக்கம் கட்டையில் அடிக்க வேண்டும். அப்படி குறி வைத்த ஸ்டிரைக்கர் அங்கே மோதி, நமது காய் பக்கம் வேகமாய் திரும்பி, அதை பாக்கெட்டுக்குள் தள்ளும். இதற்கு ஆங்கிலத்தில், "தேர்ட் பாக்கெட் எய்ம்' என்பர்.
அதுபோல வாழ்க்கையிலும் சில, "தேர்ட் பாக்கெட் எய்ம்' உள்ளது நண்பரே. எதை, எங்கே, யாரிடம் சொன்னால், இங்கே, இந்த இருவரும் தங்களது செய்கைகளை உணர்ந்து, பிரிவர் என்பதை யோசித்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட இருவரை விட்டு, ஐந்து வருடம் வெளிநாடு போய் வந்தது... உங்களது அசட்டுத் தனம் தான்.
இப்பொழுது அந்த மூன்றாம் மனிதர் இல்லை. ஓகே., அதைப்பற்றி பேசி, மறுபடி மறுபடி மனசைப் புண்ணாக்கிக் கொள்ள வேண்டாம். கண்டிப்பாய் உங்களால், உங்கள் மனைவியை மன்னிக்க முடியாது. நடந்ததை மறக்கவும் முடியாது. அதே சமயம், மானசீகமாய், மற்றவர்களுக்குத் தெரியாமல், ஏன், உங்கள் குழந்தைகளுக்குக் கூடத் தெரியாமல், எந்த கோர்ட்டுக்கும் போகாமல், அவளை விவகாரத்து செய்து விடுங்கள். 
அதாவது, அவள் உங்கள் வீட்டிலேயே இருக்கட்டும்; உங்கள் குழந்தைகளுக்குத் தாயாக, உங்கள் பெற்றோருக்கு சேவை செய்யும் ஒரு கேர் டேக்கர் போல, உங்களுக்கு சமைத்துப் போடட்டும், ஒரு சமையற்காரியாக. 
இவைகளுக்கு, நீங்கள் தரும் சம்பளம் தான், உங்கள் மனைவி என்கிற அந்தஸ்து. யோசித்துப் பாருங்கள். நம்மிடம் வேலை செய்ய வருகிற பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை, நம்மை எந்த விதத்திலும் பாதிக்காதல்லவா... அவள் யாரோ... நீங்கள் யாரோ? வாழ்க்கை யாருக்காகவும், எதற்காகவும் காத்திருப்பதில்லை.

Thursday, October 3, 2013

ஒரு பணக்கார பெண்ணுடன் பழக நேர்ந்தது. அவள் திருமணமானவள்; வயது 30

எனக்கு வயது 27; திருமணம் ஆகவில்லை. படித்துவிட்டு, பிசினஸ் செய்து, சமுதாயத்தில், ஓரளவு நல்ல அந்தஸ்தில் உள்ளேன். என் வாழ்க்கையில், எனக்குன்னு ஒருத்தி இருக்க வேண்டும். எனக்காக அவள்; அவளுக்காக நான் என, உயிருக்கு உயிராக வாழவேண்டும் என்று, ஆசைப்படுபவன் நான். அந்த மாதிரி ஒருத்தி எனக்கு கிடைப்பாளா என்று, ஏங்கி தேடிக் கொண்டிருந்தேன்.
ஒரு சில ஆண்களை போல், ரோட்டில் செல்லும் பெண்களை சைட் அடிப்பது, ஜொள் விடுவது, அரட்டை அடிப்பது, தினம் ஒரு பெண்ணுடன் ஊர் சுற்றுவது, இதெல்லாம் எனக்கு பிடிக்கவில்லை. அதை நான் கேவலமாக நினைப்பவன்; அதில், உடன்பாடும் இல்லை.
கடந்த ஆறு வருடங்களுக்கு முன், எதிர்பாராத விதமாக, ஒரு பணக்கார பெண்ணுடன் பழக நேர்ந்தது. அவள் திருமணமானவள்; வயது 30. அவளது கணவனும், நானும் பிசினஸ் பார்ட்னர்ஸ்; அதுவே, எனக்கு சாதகமானது. 
அவளும், நானும் மணிக்கணக்காக பேசுவோம். அதுவே, எங்களிடையே மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்தியது. அவளுடைய கணவனை பிடிக்கவில்லை என்று சொல்வாள். அவளுடைய அழகான தோற்றம், வசீகர பார்வை, கலகலப்பான பேச்சு, எனக்கு மிகவும் பிடிகும்.
நான் எதிர்பார்த்தது போலவே அவள் இருந்தாள். "உன்னை, எனக்கு, மிகவும் பிடித்திருக்கிறது' என்று சொன்னாள். எனக்காக அவள், அவளுக்காக நான் என்று, இருவரும் உயிருக்கு உயிராக பழகி வந்தோம். அவள் கணவன் இல்லாத நேரத்தில், அடிக்கடி இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டோம். எங்களைப் போல் இல்லற வாழ்க்கையை அனுபவித்தவர்கள், இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது.
உண்மையிலேயே சொர்க்கம் என்றால், என்ன என்பதை, அவளிடம்தான் தெரிந்து கொண்டேன். 
"எந்த சூழ்நிலையிலும், நான் உன்னை விட்டு பிரிய மாட்டேன். நாம் இருவரும், சாகும்வரை, இதே போல் இருக்க வேண்டும்; நீ இல்லை என்றால், உயிரை விட்டு விடுவேன்...' என்று, சொல்வாள்.
"என் வாழ்கையில், நீ எனக்கு கிடைத்தது பெரும் பாக்கியம். உன்னைத்தவிர, வேறு எந்த ஆணையும் தலை நிமிர்ந்து பார்க்க மாட்டேன்...' என்றாள்.
இவை எல்லாம் கடந்த, ஆறு வருடங்களாக நடந்தவை. அதற்கு அப்புறம்தான், என் வாழ்க்கை நாசமாக துவங்கியது. இவ்வளவு நாட்களாக, என்னைவிட அழகான, வசதியான வேறு ஆள் கிடைக்காததால் தான், என்னிடம் பழகி இருக்கிறாள் என்று, இப்போதுதான் தெரிந்தது.
ஒரு நாள், அவள் வீட்டிற்கு எதிர்பாராதவிதமாக சென்றபோது, வேறு ஒருத்தனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்து விட்டேன். உடனே அவள், "இனிமேல், என்னைப் பார்க்க வர வேண்டாம் உன்னை எனக்கு பிடிக்கவில்லை...' என்று, சொல்லி விட்டாள்.
இவ்வளவு நாட்களாக, என்னிடம் நல்லவள் போல் நடித்து, பாசத்துடன் இருப்பது போல் பாசாங்கு செய்து, ஆசை வார்த்தை பேசி, என் மனதை கெடுத்து, ஏமாற்றி, நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறாள். 
நான் மனசார விரும்பிய, என் மானசீகக் காதலி, இன்னொருவனுடன் இருப்பதை ஜீரணிக்க முடியவில்லை. இந்த ஏமாற்றத்தை நினைத்து, அழுது கொண்டிருக்கிறேன்... அவளைத் தவிர, வேறு ஒருத்தியை நினைக்கவும் தோன்றவில்லை.
அவள் என்னுடன் பழகியதை மறக்க முடியவில்லை. அவள் நெறிகெட்டவள் என்றும் ஏற்கனவே, இதேபோல், இரண்டு ­மூன்று பேருடன் பழகியிருப்பதும்; போர் அடித்தால் ஆளை மாற்றும் பழக்கமுடையவள் என்றும் தெரிய வந்தது.
இப்போது, பெண்கள் என்றாலே, இதே மாதிரி தான் இருப்பர் என்று தோன்றி, மனதில் வெறுப்பு ஏற்படுகிறது. பெண் இனத்தை கேவலப்படுத்தும், இம்மாதிரி பெண்களும் இருக்கின்றனரே... புடவையை மாற்றுவதுபோல், ஆளை மாற்றும் பெண்களை எந்த வகையில் சேர்ப்பது? தெரு நாய்க்கும், இவளுக்கும் என்ன வித்தியாசம். 
"தவறான பெண்ணுடன் பழகி ஏமாந்து விட்டோமே... உயிரையே வைத்திருந்த ஒருத்தி என்னை ஏமாற்றி விட்டாளே...' என்று, தின¬ம் மனதிற்குள் அழுது கொண்டிருக்கிறேன்.
இந்த கேடு கெட்ட சமுதாயத்தில், வாழப் பிடிக்கவில்லை. தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது. நாங்கள் பழகியது எங்கள் இருவருக்கு மட்டுமே தெரியும்! நீங்கள் தான் எனக்கு நல்வழி காட்ட வேண்டும். 
என்னால் தொழிலில் கவனம் செலுத்த ¬முடியவில்லை. பைத்தியம் பிடித்தவன் போல் யாருடனும், "ப்ரியாக' பேசாமல், எப்போதும் டென்ஷனுடன் உள்ளேன். அவளை மறந்து வாழ வழி சொல்லுங்கள்!
இப்படிக்கு,
உங்கள் புத்திமதியை எதிர்பார்த்து மிகுந்த மனவேதனையுடன் உங்கள் மகன்.


அன்பு மகனுக்கு—
உன் கடிதம் கிடைத்தது. படித்ததும் வருத்தமும், வேதனையும் தான் ஏற்பட்டது. வருத்தம் உன்னுடைய நிலைமை கண்டு அல்ல; உன்னை நம்பி, பார்ட்னராக சேர்த்துக் கொண்ட நண்பனின் மனைவியை, ஆறு வருடங்களாக, நண்பருக்கே தெரியாமல் அனுபவித்து விட்டு, "இந்த உலகமே கேடு கெட்ட உலகம்' என்கிறாய் பார்... அதனால்!
வேதனை: "வாழ்க்கையில் எனக்குன்னு ஒருத்தி இருக்கணும்... எனக்காக அவளும், அவளுக்காக நானும் உயிருக்குயிராக வாழ வேண்டும்' என்ற, உயர்ந்த லட்சியத்தை, நீ சொன்னாய் பார்... அதற்காக!
தெருவில் போகும் பெண்களை, "சைட்' அடிப்பது, ஜொள் விடுவது, அரட்டை அடிப்பது போன்ற கேவலமானச் செயல்களை செய்ய மாட்டாய்... ஆனால், பிறர் மனைவியோடு, உலகத்தில் யாரும் அனுபவிக்க முடியாத இன்பங்களை அனுபவிப்பாய்; அதில் தவறேயில்லை... புடவையை மாற்றுவது போல அவள் புருஷனை மாற்றியதுதான் தவறு... அப்படித்தானே?
உனக்கு புத்தி இல்லை? "தாலி கட்டிய கணவனை பிடிக்கவில்லை... ஆனால், நம்மை பிடித்திருக்கிறது என்கிறாளே... புருஷனுக்கே அந்த நிலை என்றால், நம்மை எப்படி நடத்துவாள்...' இதை ஏன் நீ நினைத்துப் பார்க்கவில்லை? இப்படிப்பட்ட இழிவானச் செயலை செய்து, அதற்கு நியாயம் கற்பித்து, அவள் மீது மட்டும் தான் குற்றம் என்கிற ரீதியில் பேசுகிறாய்...
நீயும், அவளும் படுக்கையிலிருந்ததை, அவள் கணவன், அவன் தான் உன் நண்பன், பார்த்திருந்தால் என்னவாகியிருக்கும்? அவனுக்குப் பைத்தியம் பிடித்து, சட்டையை நார் நாராகக் கிழித்துக் கொண்டிருக்க மாட்டானா...
தம்பி, எது உன்னுடையது... அதை, நீ இழந்ததாக வருத்தப்படுவதற்கு? நீ சாப்பிட்டதே, இன்னொரு வருக்குச் சொந்தமான தோப்பு, திருட்டு மாங்காய். அது எப்படி உனக்கே சொந்தமாக முடியும்? உன்னைப்போல இன்னொருவன், அவனைப் போல அடுத்தவன்...
வாழ்க்கையில் கல்லூரி படிப்பும், பிசினஸ் செய்வதற்கான அறிவும், திறமையும் மட்டும் இருந்தால் போதாது; விவேகம் வேண்டும்.
நமக்கு சொந்தமில்லாத ஒற்றை ரூபாயைக் கூட, "இது என்னுடையது இல்லை' என்று சொல்கிற, மனோ வலிமை வேண்டும். அழகான, வசதியான, வசீகர தோற்றம், பார்வை, பேச்சு உடைய இன்னொருத்தன் மனைவி, கையால் அமிர்தத்தையே தந்தாலும், "வேண்டாங்க... நான் இப்பத்தான், என் பெண்டாட்டி கையாலே வயிறு முட்டக் கஞ்சி சாப்பிட்டு வந்தேன்...' என்று, மறுக்கக் கூடிய பக்குவம் வேண்டும்.
உனக்கென்று, கஞ்சியைக் கொடுத்தாலும் உண்மையாய், உத்தமியாய் இருப்பவளைப் பார்த்து மணந்து கொள்... அதற்கு முன், இந்த ஆறு வருடத் தொடர்பினால், உன் உடம்பில், ஏதேனும், பழுது இருக்கிறதா என்று, அதாவது, "எச்.ஐ.வி.,' டெஸ்ட் செய்துகொள். 
ஏனெனில், நீ சாப்பிட்டது பலரும் சாப்பிட்ட எச்சில் தட்டில். அப்படி ஏதாவது குறை இருப்பின், உனக்குக் கழுத்தை நீட்டும் அப்பாவியும், அவஸ்தைப் படக்கூடாது பார்!
தொழிலில் முழுக்கவனம் செலுத்து; எல்லாத் தவறையும் செய்து, பெண்களை, "தெரு நாய்' அது, இது என்று, மட்டமாய் பேசாதே... பெண்மைக்கு மதிப்பு கொடு.
"யாருக்கும் தெரியாமல் தவறு செய்தோம்; என்னையும், அவளையும் தவிர, வேறு யாருக்கும் தெரியாது' என்று, ஒரு போதும் நினைக்காதே! உங்களைத் தவிர, இன்னொருவனுக்கும் தெரிந்திருக்கிறது; அதனால்தான், உனக்கு இத்தனை அவதி, துயரம் எல்லாம். அந்த ­இன்னொருவர் தான் கடவுள்.
கடவுளுக்குத் தெரியாமல் நாம், சின்ன குண்டூசியைக் கூட நகர்த்தி விட முடியாது. நல்லதே நினை; நல்லது நடக்கும்!

Sunday, September 8, 2013

வெகு நாட்களாக என் பிரச்னை

அன்புள்ள சகோதரி —
வெகு நாட்களாக என் பிரச்னை பற்றி உனக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், என் பிரச்னை கேலிக்குரியது... தயவு செய்து தப்பாக நினைக்காதே... என் வரையில் என் பிரச்னை அதிதீவிரமானது. உடனே தீர்வடையாவிட்டால் எனக்குப் பைத்தியமே பிடித்து விடும் போலிருக்கிறது. விஷயம் இதுதான்:
எனக்கு, 17 வயதில் திருமணம். கூட்டுக் குடும்பம். புகுந்த வீடு மிகவும் ஆச்சாரமானது... 18ல் தொடங்கி; வரிசையாய் நாலு குழந்தைகள். கணவருக்கு நான் தேவையாக இருக்கும் போதெல்லாம் ஒன்று பிரசவித்திருப்பேன், இல்லா விட்டால், சுத்தபத்தமாய் குளித்து முடித்து சமைத்துக் கொண்டிருப்பேன். இருந்தது ஒரு ஹால், ஒரு படுக்கையறை...
இரவு, 11:00 மணிக்கு மேல், மாமியார் அனுமதி கொடுத்ததும் தான் படுக்கையறைக்குள்ளேயே அடியெடுத்து வைக்க வேண்டும். அப்போது பார்த்து குழந்தை அழுது ஊரைக் கூட்டும். என் கணவருக்கு கோபமாய் வரும். "சனியனை எடுத்துட்டு வெளியிலப் போய் தொலை...' என்று கத்துவார்.
இப்படியே, என், 35 வயது வரை காலம் ஓடி விட்டது.
என் கணவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. வருடத்துக்கு ஒருமுறைதான் வருவார். நான்தான் குழந்தைகளைப் படிக்க வைத்து, மாமியாரையும் கவனித்துக் கொண்டு இருந்தேன்.
சில வருடங்களுக்குப் பின் மாமனார், மாமியார் காலமாயினர். நாலு குழந்தைகளில் இரண்டு பேருக்கு திருமணமாகி, வெளியூரில் இருக்கின்றனர். இரண்டு பேர் வெளிநாட்டில் படிக்கின்றனர். இப்போது என் கணவர் ஓய்வு பெற்று வீட்டோடு இருக்கிறார். 
ஒரு சில கம்பெனிகளில் டைரக்டராக இருக்கிறார். கை நிறைய பணம்... தேவையானதை வாங்கலாம். அவர் என்னை ஒருநாளும் கட்டுப்படுத்தியதே இல்லை. 45ல் மாதவிலக்கு நின்றது. அப்போதெல்லாம் என்னுள் தாங்க முடியாத, "செக்சுவல் அர்ஜ்' இருந்தது. என் கோபத்தையும், அழுகையையும் வெளிக்காட்ட யாருமே இல்லாததால், எனக்குள் வைத்தே மறுகிப் போனேன்.
இப்போது கடந்த மூன்று வருடங்களாகத் தான் இவர் என்னுடன் இருக்கிறார். அவரைப் பொறுத்தவரையில், காலையில் பூஜை, கோவில்... மாலையில் கிளப், பைவ் ஸ்டார் ஓட்டல்களில் பிசினஸ் பார்ட்டி... இப்படி போய் கொண்டிருக்கிறது!
நாற்பத்தியைந்து வயதில் நான் நினைத்ததுண்டு... விடிகாலையில் எங்கிருந்தாவது ஒரு தேவகுமாரன் வந்து, என் தாபத்தை தீர்த்து விட்டு போக மாட்டானா என்று!
இப்போது ஐம்பதிலும் என் மனம் இளமையாக இருக்கிறது... கணவருடன் சேர்ந்து படுப்பதுதான் இல்லை என்றாலும், அவரது அன்பான சொல், அரவணைப்பு, "இத்தனை நாளும் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டாய்' என்கிற பரிவான விசாரிப்பு... இது கிடைத்தால் போதும். ஆனால், அவரோ இதை ஒரு நாளும் பொருட்படுத்தியது இல்லை.
நீயே சொல்... இவர், இவரது, இளமைப் பருவத்தில் எங்கெங்கு இருந்தாரோ, அங்கெல்லாம் தேவைப்பட்ட போது தன் உடற்பசியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார்... இது பற்றி நண்பர்களுடன் சிரித்து பேசும் போதெல்லாம் தமாஷாகக் கூறி, என்னைப் பார்த்து கண் சிமிட்டுவார்...
இப்பக் கூட என் மன உளைச்சல் தாங்காமல் எல்லார்கிட்டேயும் எரிந்து விழுகிறேன். வீட்டில் நிம்மதியே இல்லை. என் கணவரைப் பார்க்கும் போது மட்டுமில்லை, அவர் சம்பந்தப்பட்ட சட்டை, செருப்பு, வாட்ச் எதைப் பார்த்தாலும் நார் நாராகக் கிழித்து, தூக்கிப் போட்டு உடைக்க வேண்டும் போல் இருக்கிறது. 
என் பிரச்னைக்கு நீதான் பதில் தர வேண்டும். 
இப்படிக்கு
— அன்பு சகோதரி.

அன்பு சகோதரிக்கு—
தேவையானபோது, "செக்ஸ்' வைத்துக் கொள்ள முடியாமல், பிறகு அதற்கு சமயமும், சந்தர்ப்பமும் கிடைக்கும்போது, ஒரே வீட்டில், இருவேறு படுக்கையறையில் படுத்திருக்கும் அவலம் கஷ்டமானதுதான்; புரிகிறது.
ஐம்பது வயதானாலும் மனசை பொறுத்த வரையில் இளமையாகவே இருப்பதாகவே எழுதியிருக்கிறாய்.
முதலில் என் பாராட்டுகள். இந்த காலத்தில் ஒரு பிள்ளை பெற்று, 25 வயசு முடிவதற்குள்ளாகவே எல்லாம் முடிந்து விட்டதாக நினைத்து, பெண்கள், தங்களை கவனித்துக் கொள்ளாமல், "புஸ்' சென்று உப்பியோ, குச்சியாய் இளைத்தோ போகின்றனர்.
பல ஆண்பிள்ளைகளுக்கு பெண்ணின் மனசைப் படித்தறியும் சமர்த்துப் போதாது. தனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று தேடித் தேடி போவரே தவிர, தாலி கட்டியவளுக்கு எது வேண்டும் என்று கேட்கத் தெரியாது. அப் பேர்ப்பட்ட புத்திசாலிகளுக்கு, நாம்தான் நம் தேவையைக் கோடிட்டு காட்ட வேண்டும்.
பிறந்த நாள், திருமண நாள் என்றால், பரஸ்பரம் வாழ்த்து அட்டை அனுப்பி, குழந்தைகளுடன் சேர்ந்து ஒரு அட்டை என்றால், தனியாக - அந்தரங்கமாக, மெல்லிய, கிளர்ச்சியூட்டும் வார்த்தைகளுடன் இன்னொரு வாழ்த்து அட்டையை அனுப்பி, உங்களது கட்டில் உறவை சாகாமல் வைத்திருக்கலாமே!
"அவர் வரையில் அவர் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டார்... இனி மேல் அவருக்கு எதுவும் தேவையில்லை. என்னையும் அப்படியே நினைக்கிறார்...' என எழுதியிருக்கிறாய்.
உனக்கு எதுவும் தேவையில்லை என்பதை அவர் அறிந்து கொண்டது எப்படி? உன் நடையுடை பாவனை, விட்டேற்றியானப் பேச்சு, எரிச்சலில் வீட்டு வேலைக்காரிகளிடம் கத்துவது, அவரது சினேகிதர்களைக் கண்டால் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வது... இப்படித்தானே!
என்றோ வெளிநாட்டில் பழகிய பெண்கள் அவரது மனசில் இடம் பிடித்திருக்கின்றனர் என்றால், உன்னால் அது முடியாதா?
"இத்தனை வயசுக்கு மேல் புருஷனை மயக்கித்தான் இல்லறம் நடத்த வேண்டுமா...' என்று கேட்டால், என்னைப் பொறுத்தவரையில், அவசியமில்லை என்று தான் நான் சொல்வேன். காரணம், அது என்னுடைய மனப்பாங்கு. "போடா' என்று ஒரு நிமிஷத்தில் உதறிவிட்டு போய்விடலாம் - நானாக இருந்தால்.
ஆனால், இது உன்னைப் பொறுத்த விஷயம், உனக்கு கணவனின் அன்பும், அரவணைப்பும் தேவை. இல்லாவிட்டால் அவள், புருஷனின் சட்டையைக் கிழிப்பாள்; வாட்ச்சை உடைப்பாள்; டைஜின் மருந்துடன் பேதி மருந்தைக் கலந்து வைப்பாள். எப்படியோ தன் கொந்தளிக்கும் மனசுக்கு ஒரு வடிகாலைத் தேட முயற்சிப்பாள்... அப்படித்தானே!
ப்ளீஸ்... இது உன்னையே சிதைத்துக் கொள்ளும் விஷயம். ஒன்று செய்... உன் உடைகளில் கவனம் செலுத்து. உன் சினேகிதிகளிடம், உன் அவரை விடவும் ஜோராக, "ஜோக்' அடித்துப் பேசு. 
இன்றைய நாட்டு நடப்பிலிருந்து, சினிமா, நாட்டியம், சங்கீதம் என்று சகலத்தைப் பற்றியும், "டாப் டு பாட்டம்' பேசக் கற்றுக் கொள். முடிந்தால் , மூன்று மாதம் போல, வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளோடு போய் இருந்து விட்டு வா.
கணவர் பூஜைக்கு உட்காரும் முன், நீ அதே சாமிப் படத்தின் முன் கண் மூடி உட்கார். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, வீட்டு நாய் குட்டியை கொஞ்சு. அவரது நண்பர்களிடம் சரளமாய் பேசு. அவர் கேட்கும் முன்பே வீட்டுக்குள்ளேயே சின்னதாய் பார்ட்டி வைத்து இன்ப அதிர்ச்சிக் கொடு.
எப்போதுமே, நீ உன்னைப் புதுப் பொலிவுடன் வைத்துக் கொள். அவர், தன் தலையணையைத் தூக்கிக் கொண்டு, "உன் பெட்ரூமில் இன்னிக்கு நானும் படுத்துக்கலாமா...' என்று கேட்டால், உடனே, "வித் பிளஷர்' என்று கூறி விடாமல், கொஞ்சம் யோசித்து, "இன்னிக்கு மட்டும்தான்' என்று கூறு... நாளைக்கும் கேட்டால், அப்போது இன்னொரு, "இன்னிக்கு மட்டும் தான்' என்று சொல்லிக் கொள்ளலாம்.
நீ மனசு வைத்தால் எல்லாம் நல்லதாய் நடக்கும்.
அடுத்து வரும் சந்தோஷ நாட்களில் என்னை மறந்து விடாதே! 

Tuesday, September 3, 2013

நான் 23 வயது பெண்

அன்புள்ள அம்மாவிற்கு — 
நான் 23 வயது பெண். எனக்கு இரண்டு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உண்டு. நான் ஓர் அனாதை. நான் விடுதியில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தபோது, இரக்க முள்ள ஒரு மனிதர் என்னைப் பார்த்து அனுதாபப்பட்டு, "திருமணம் செய்து கொள் கிறேன்...' எனக் கூறி அழைத்து வந்தார்.
அவரைப் பற்றி அங்குள்ளவர்களிடம் கேட்டேன்... அனைவரும் அவரை, "நல்லவர்' என்று கூறினர். எனக்கு படிப்பறிவு இல்லை. அப்போது அவர் வயது 35. என் வயது 17. "என்னை திருமணம் செய்து கொள்கிறேன்' என அழைத்து வந்தவர், மூன்று குழந்தைகள் பிறந்த பின்பும் திருமணம் செய்யவில்லை. அவர் செல் வந்தர்; என்னை நல்ல முறை யில் வைத்திருந்தார்.
எனக்கு ஒரு குழந்தை பிறந்த பின் தான் தெரியும், அவருக்கு ஏற்கனவே மணமாகி முதல் மனைவியும், மூன்று குழந்தை கள் உண்டு என்று. அவர்களுக்கு தெரியாமல், என்னை தனி வீட்டில் வைத்து பராமரித்து வந்தார். எங்கள் விஷயம் தெரிந்தவுடன், அவர்கள் வீட்டினர் சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வாங்கிவிட்டு, "அவளை விட்டு விலகி வந்தால் இங்கு இரு, இல்லாவிட்டால் நீ வேண்டாம்...' என கூறி விட்டனர். அவர் என்னிடம் இருந்து விட்டார். ஏழு வருடங்கள் ஆகிறது. என்னை நன்றாக வைத்திருந்தார். எங்களிருவருக்கிடையே இருந்த அளவுகடந்த அன்பினால், குடும்ப கஷ்டம் பெரிதாக தெரியவில்லை.
என் பிரச்னை...
தற்போது அவரிடம் நிறைய மாற்றங்கள். நான் தற்கொலை செய்ய முயன்ற போது என்னை காப்பாற்றி, சமாதானப்படுத்தி திருமணம் செய்து கொண்டார். தற்போது என்னை கண்டாலே அவருக்கு பிடிக்கவில்லை; குழந்தைகளையும் கவனிப்பதில்லை. இப்போது, அவர் 15 வயதுள்ள பெண் ஒருவருடன் தொடர்பு வைத்துள்ளார். பணம் கொடுப்பதில்லை. வீட்டிற்கு சரியாக வருவதில்லை. கேட்டால், "நான் ஆம்பிளை, எப்படி வேண்டுமானலும் இருப்பேன். எது வேண்டு மானாலும் செய்வேன். நீ கேட்கக் கூடாது...' என்கிறார்.
இப்போது தகாத நண்பர்களின் சேர்க்கை வேறு அவருக்கு. அவர் நண்பர்கள் சொல்படி இப்போது அப் பெண்ணிடம் வாழ்ந்து வருகிறார். எனக்கு எந்த தொழிலும் தெரியாது; படிக்கவில்லை; குழந்தைகளை பராமரிக்க யாருமில்லாததால், வேலைக்கும் செல்லவில்லை.
ஒன்றரை வயது கைக்குழந்தை வேறு உள்ளது. தங்களின் ஆலோ சனைக்காக காத்திருக்கிறேன். அவர் என்னை விட்டு விலகி செல்ல திட்டம் போட்டுக் கொண்டிருக் கிறார். நான் கஷ்டப்பட்டு வாங்கிய பொருட்கள் மற்றும் துணி முதற் கொண்டு எடுத்துச் செல்கிறார். அருகில் இருப்பவர்கள், "பொறுமை யாக இரு' என்கின்றனர். தாங்கள் தான் எனக்கு நல்ல பதில் தர வேண்டும்.
— அன்பு மகள்.

அன்பு மகளுக்கு — 
உன் கடிதம் கண்டேன். உனது நிலை கண்டு மிகவும் வருத்தப் படுகிறேன். நீ படிப்பறிவு இல்லாதவளாக, அனாதையாக இருக்கலாம். ஆனால், எது நல்லது - எது கெட்டது என்று பகுத்தறியும் அறிவு இல்லாதவளாக இருந்து விட்டாயே என்பதுதான் என் வருத்தம். 17 வயதில் உனக்கு உலக அனுபவம் இல்லாமல் இருந்திருக்கலாம்.
ஆனால், இப்போதும் அப்படியே இருப்பது தப்பு கண்ணம்மா. எப்போது உன்னை மணப்பதாகக் கூறி அழைத்து வந்தவர் ஏற்கனவே திருமணமாகி, மனைவி, குழந்தைகளோடு இருக்கின்றார் என்பது உனக்குத் தெரிய வந்ததோ - அப்போதே ஒரு குழந்தை பிறந்த கையோடு - போதும் இவருடன் வாழ்ந்த வாழ்க்கை என்று நீ வெளியேறி இருக்க வேண்டும். எந்த நம்பிக்கையின் அடிப்படையில் இரண்டு, மூன்று என, பெற்றுக் கொண்டே போனாய்?
நீ தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது, அவர் காப்பாற்றி, சமாதானப்படுத்தி, திருமணம் செய்து கொண்டார் என்று எழுதியிருக் கிறாய். காப்பாற்றி, சமாதானப் படுத்தி உனக்கென்ற நல்ல துணை வரைத் தேடி, திருமணம் செய்து வைத்திருந்தாலோ அல்லது உனக்கென ஏதாவது தொழிற் கல்விக்கு ஏற்பாடு செய்திருந்தாலோ அது நல்ல மனிதனுக்கு அடை யாளம்!
திருமணம் செய்து கொள்வது, அதுவும் முப்பத்தைந்து வயதில், பதினேழு வயதுப் பெண்ணை மணப்பது, எந்த விதத்தில் நியாயம்? இதிலிருந்தே அந்த மனிதரின் சுயநலம் தெரியவில்லை?
மற்றவர்கள், அதாவது, அருகில் இருப்பவர்கள், "பொறுமையாக இரு' என்று சொல்கின்றனர் என்றால், சட்டப்படியோ, வேறு விதமாகவோ நீ எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதினால் தான். நிஜத்தில், நீ அந்த மனிதரின் சட்டபூர்வமான, மனைவி இல்லை; கூட்டி வந்து வைத்திருக்கிறார்.
விரட்டி விட்டால் தட்டிக் கேட்கவோ, வேறு நடவடிக்கை எடுக்கவோ உனக்கு எந்தவொரு உரிமையும் இல்லை. இதை நான் சொல்ல மிகவும் வருத்தப் படுகிறேன். மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியிருக்கிறாய் கண்ணம்மா. இனிமேலாவது விழித்துக் கொள். போதும் இந்த ஆளுடன் நீ வாழ்ந்தது. நாலாவது ஒன்று வயிற்றில் வரும் முன், இந்த உறுதியில்லாத வாழ்க்கையை உதறு. மறுபடியும் ஏதாவது ஒரு அநாதை இல்லத்தில் வேலை கிடைத்தாலும் கூட பரவாயில்லை. உன் குழந்தை களுடன் கிளம்பி, இது போன்ற இல்லத்தில் தங்க முடியுமா என்று பார்.
அதன்பின் ஏதாவது ஒரு தொழிலை, அது சமையல் தொழிலானாலும் சரி - முறையாக, நேர்த்தியாகக் கற்றுக் கொள். படித்தவர்களுக்குத்தான் இந்த நாட்டில் வேலை கிடைக்கும் என்கிற, சித்தாந்தத்தை மாற்று... எந்தவொரு வேலையும் மட்டமில்லை.
உன் குழந்தைகள் - தங்களது நிலையை உணர்ந்து, உள்ளுக்குள்ளேயே வெந்து, குமையத் துவங்கும் முன், உனக்கென ஒரு பாதை அமைத்துக் கொள். எத்தனையோ மருத்துவமனைகளில் ஆயா வேலை, வீடுகளில் குழந்தை களைப் பார்த்துக் கொள்ளும் வேலை, கூட்டிப் பெருக்கும் வேலை... இப்படி எதுவோ ஒன்று... நாலு வீடுகளில் காலையில் இட்லி, வடை சுட்டுக் கொண்டு போய் விற்றாவது பிழைப்பை நடத்து... கவுரவமாக இருக்கும்.
இனி, இவரை நம்பி, வாழ்நாளை வீணாக்காதே!

Tuesday, August 20, 2013

கற்பைக் 'குறி'வைத்த சித்தர்

ராத்திரி பூஜைன்னா அப்படித்தான்!
கற்பைக் 'குறி'வைத்த சித்தர்
பெற்ற மகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய தாய், பெண் களை விபசாரத் தொழி லுக்குப் பழக்கிய போலி சித்தர், இவர்களுக்கு ஆள் பிடித்துக்கொடுத்த கும்பல், இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போலீஸ்... என்று அத்தனையும் வெளிச் சத்துக்கு வந்துள்ளது. அமைதியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொருவரிடமும் சமூகத்தின் மீதான அச்சத்தையும் அருவருப்பையும் அதிகப்படுத்தி உள்ளது இந்தச் சம்பவம். பெற்ற தாயால் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ள விவரங்கள் பதைபதைக்க வைக்கின்றன.   
''என் பெயர் அமுதா. என் அம்மா பெயர் வசந்தி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). நான்கு ஆண்டுகளுக்கு முன் எனது அப்பா மாரியப்பன் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். என் அம்மாவுக்கு விபசாரம்தான் முழு நேரத் தொழில். அவரைத் தேடி நிறைய ஆண்கள், வீட்டுக்கு வருவார்கள். எங்கள் வீட்டில் ஒரே அறைதான். அங்கே நான் இருப்பதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் என் அம்மா, வீட்டுக்கு வரும் ஆண்களுடன் படுத்திருப்பார். இதை நான் தினமும் பார்ப்பேன். அதனாலேயே என் கவனம் படிப்பில் இருந்து சிதறியது.
எங்கள் பகுதியில் அறவழிச் சித்தர் என்ற குறி சொல்லும் சாமியார் இருந்தார். என் அம்மா அவரைப் பார்க்க அடிக்கடி போவார். 'உனக்கு நல்ல படிப்பு வர ராத்திரி பூஜை பண்ணணும்னு சித்தர் சொல்லிருக்கிறார்’ என்று, அம்மா ஒருநாள் சொன்னார். ராத்திரி பூஜைக்கு என்னை மட்டும் அறைக்குள் அனுப்பினார். என் உடைகளை கழற்றிவிட்டு நிர்வாணமாக உட்காரவைத்து, என் உடல் முழுவதும் திருநீற்றைப் பூசினார் சித்தர். பிறகு, தீர்த்தம் கொடுத்தார். அதைக் குடித்ததும் அரை மயக்கமாகி விட்டேன். என்னைப் படுக்கவைத்து சித்தர் எனக்குள் கலந்தார். அதை என்னால் உணர முடிந்தது. ஆனால், கத்த முடியவில்லை. பூஜை முடிந்து வெளியில் வந்து நான் என் அம்மாவிடம் இதைச் சொல்லி அழுதேன். ஆனால், ராத்திரி பூஜைன்னா அப்படித்தான்... இதையெல்லாம் பெருசுபடுத்தாதே!’ என்று சொல்லிவிட்டார்.
அதன்பிறகு அடிக்கடி அந்தச் சாமியாரிடம் என்னை என் அம்மா அனுப்புவார். வேறு வழியில்லாமல் நானும் 'ராத்திரி பூஜை’க்குச் செல்வேன். ஒரு நாள் அந்தச் சாமியார், என்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே கடிகாரம் ரிப்பேர் செய்யும் கடை வைத்திருக்கும் குமார் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டார். பகல் நேரத்தில் கடைக்குள் வைத்தே குமார் என் மீது கைவைத்தான். தடுத்தேன். என்னை அடித்தான். நான் அழுது அடம்பிடித்தேன். குமார் எனக்கு ஒரு ஊசி போட்டான். நான் மயக்கமானதும் அந்த மிருகம் பட்டப்பகலில் கடைக் குள் வைத்தே என்னை வேட்டை யாடியது.
குமாரோட வீட்டுக்கு என்னை கொண்டுபோனாங்க. அங்கே அவரோட மனைவி ஜெயாவும் அவருடைய தோழி லதாவும் இருந்தாங்க. அவங்ககிட்ட குமார், 'இவளைத் தொழிலுக்கு பழக்கியாச்சு. கொஞ்சம் அடம்பிடிப்பா. அடிங்க... இல்லைன்னா மாத்திரை போட்டு அனுப்புங்க’னு சொன்னான். அதுக்கப்புறம் தினமும் எனக்கு மாத்திரையைப் போட்டு நாலு பேருகிட்ட அனுப்புவாளுங்க. ஒருநாள் ராத்திரி 11 மணி இருக்கும் குமாரோட நண்பர்கள் ஆறு பேர் என்னை ஒரு கார்ல மெரீனா பீச்சுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. என்னைக் கடற்கரை ஓரத்துல படுக்கவெச்சு ஆறு பேரும் விடியவிடிய நாசமாக்கினாங்க. கத்துறதுக்குகூட என் உடம்பில் தெம்பு இல்லை.
ஒருநாள் அதிகாலை குமார் வீட்டுல எல்லோரும் தூங்கிட்டு இருக்கும்போது நான் அங்கிருந்து தப்பினேன். திருப்பதி வந்தேன். அங்கே மாங்காய் வாங்கி வியாபாரம் செஞ்சேன். அங்கேதான் போலீஸ் என்னை விசாரிச்சாங்க. என்னை மீண்டும் என் அம்மாவுடன் அனுப்பாதீர்கள். என்னைக் காப்பாற்றுங்கள்...'' என்று போகிறது அந்தக் கொடுமையான வாக்குமூலம்.
சைல்டு ஹெல்ப் லைன் மூலம் தமிழக போலீஸுக்கு வந்த இந்த விவகாரம் டி.ஜி.பி.ராமனுஜத்தின் கவனத்துக்குப் போனது. அவர் நேரடியாக விசாரித்து வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கடந்த 15-ம் தேதி அறவழிச் சித்தரையும், சிறுமியின் தாய் வசந்தியையும் கைதுசெய்தனர். குமார், அவருடைய மனைவி ஜெயா மற்றும் லதா உள்ளிட்ட கும்பலை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அறவழிச் சித்தரின் வீட்டுக்குச் சென்றோம். வீடு பூட்டியிருந்தது. அந்த வீட்டு உரிமையாளரின் மகன் சுனிலிடம் பேசினோம். ''15 ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டில் அறவழி சித்தர் வாடகைக்கு குடியேறினார். பெண்கள்தான் அதிக அளவில் குறி கேட்க வருவார்கள். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், குறி கேட்கவந்த சிறுமியை சாமியார் கற்பழித்துவிட்டதாக பிரச்னை கிளம்பியது. அப்போதே நாங்கள் வீட்டைக் காலி செய்யச் சொன்னோம். ஆனால், அவர் போகவில்லை. அதன் பிறகு எங்களுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்காததால் நாங்களும் விட்டுவிட்டோம்'' என்றார்.
அப்பாவிப் பெண்களை விபசாரத்தில் தள்ளும் இந்த நெட்வொர்க் முழுமையாக அழிக்கப்பட வேண்டும்.

Monday, August 19, 2013

தொடரும் பாலியல் தொல்லைகள்

தொடரும் பாலியல் தொல்லைகள் - பளிச் டிப்ஸ்
உலகின் இயக்கத்துக்குத் தேவையான சக்தியை அளிக்கும் சர்வ வல்லமை படைத்தவள் பெண். ஆனால், இன்றைய பெண்கள் பலரின் நிலையோ பரிதாபம். 
வீடு, கடை, பேருந்து, பள்ளி, கல்லூரி, பணியிடங்கள், பொது இடங்கள் எனப் பல்வேறு சூழல்களிலும் பெண்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர். அதில் மிக முக்கியமான பிரச்னை, பாலியல் தாக்குதல்கள். 'நகர்ப்புறங்களில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகும் பெண்களில் 10 சதவிகிதம் பேர்தான், தனக்கு நேர்ந்தது பற்றி புகார் செய்கிறார்களாம். மற்றவர்கள் அதை வெளியில் சொன்னால் அவமானமோ, ஏதேனும் பிரச்னையோ வந்துவிடும் என்று பயந்து மறைத்துவிடுகிறார்கள்’ என்கிறது ஓர் ஆய்வு.  
ஆக்ஸ்ஃபேம், சமூக மற்றும் ஊரக ஆராய்ச்சி நிறுவனம் சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் மேற்கொண்ட ஆய்வில், வேலைக்குச் செல்லும் 17 சதவிகித பெண்கள் பாலியல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாவதாகத் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், உடல்ரீதியாக இல்லாமல், மனரீதியான தாக்குதல்கள் நடப்பதாக தெரிவித்துள்ளனர். கூட்டமாக இருக்கும் ஆண்கள் பாட்டு பாடுவது, கிண்டல் செய்வது, கமென்ட் அடிப்பது போன்றவற்றைச் செய்வதாக 70 சதவிகிதப் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
அலுவலகத்தில் பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்போருக்குத் தண்டனை, அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவரும் அளவுக்கு பிரச்னை உள்ளது. இந்தச் சிக்கலான பிரச்னையை எப்படித் தெரிந்துகொள்வது? இதனால் மனதளவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இதைத் தவிர்ப்பது எப்படி? என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
உடன் பணிபுரிபவர், உறவினர், ஆசிரியர், மாணவர், நண்பர், முன்பின் அறிமுகம் இல்லாதவர் எனப் பாலியல்ரீதியான தாக்குதல் யாரிடமிருந்து வேண்டுமானாலும் வரலாம். ஒருவர் நேரடியாகத் தொட்டுச் செய்வது மட்டும் பாலியல்ரீதியான தொந்தரவு இல்லை. ஆபாசமாக கமென்ட் அடிப்பது, செய்கை காட்டுவது போன்றவையும் தொந்தரவுதான். வீட்டில் இருப்பவர்களைவிட பணிக்குச் செல்லும் பெண்களே பாலியல்ரீதியான தொல்லைகளுக்கு அதிகமாக ஆளாகிறார்கள். காரணம் அவர்கள் வேலை செய்யும் இடத்தில் உடன் பணியாற்றுபவர்கள், மேலதிகாரிகள் எனப் பலரையும் சார்ந்து இருக்கவேண்டிய சூழல்.
இன்றைய காலகட்டத்தில் இன்டர்நெட் பயன்படுத்தாத நபர்களே குறைவு. செல்போனின் மூலமாகவே ஒருவரோடு ஒருவர் 'சாட்’ செய்ய வழி இருக்கிறது. ஃபேஸ் புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பெண்கள் பலர் தங்களின் குடும்ப விவரம், செல்போன் நம்பர் போன்றவற்றை ஈஸியாக விட்டுச்செல்கிறார்கள். இந்தத் தகவல்களை வைத்து சில ஆண்கள், பெண்களிடம் சில்மிஷங்களில் ஈடுபடுவதும் நடக்கிறது. சமூக வலைதளங்களில் அடையாளம் தெரியாத அறிமுகமற்ற ஆண்களிடம் விழிப்போடு இருக்க வேண்டும். அவர்கள் நல்லவர்களா இல்லையா என்பதே தெரியாத நிலையில் தங்களை பற்றிய தகவல்களைக் கொடுப்பது தேவையற்ற பிரசனைகளையே கிளப்பிவிடும்.
''பெண்கள் சந்திக்கும் பல்வேறு சிக்கல்களைக் கவனத்துடன் கையாள வேண்டும். பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவி செய்ய ஓடோடி வரக்கூடிய சமூகம், அவர்களின் முதுகுக்குப் பின்னால், 'ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழைய முடியும்’ என்று பழைய பஞ்சாங்கத்தைப் பேசவும் தவறுவது இல்லை. அதனால் இதுபோன்ற சிக்கல்களை விடுவிக்க மிகக் கவனமான வழிமுறைகளைக் கையாள வேண்டியது அவசியம்'' என்கிறார் நெல்லையைச் சேர்ந்த மனநல மருத்துவர் 'சினேகா’ பன்னீர் செல்வன்.
''பெண்களைப் போகப்பொருளாக நினைக்கும் ஆண்கள், குடிகாரர்கள், குற்றச்செயல்கள் செய்வதையே வாடிக்கையான நபர்கள், சமூக விரோதிகள், சாதாரண நபர்கள் என யார் மூலமாகவும் பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு ஏற்படலாம். வயது வித்தியாசமே இல்லாமல் பாலியல் தொல்லை கொடுத்த ஆண்கள்கூட இந்தச் சமூகத்தில் செய்தியாக வந்துகொண்டுதானே இருக்கிறார்கள். இது போன்ற தொந்தரவுகள், பெண்களுக்கு மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சில பெண்களுக்கு அந்தத் தவறு மீண்டும் மீண்டும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். இதனால், அவர்களால் நிம்மதியாக எந்த வேலையையும் செய்ய முடியாமல், மன நோயாளியாகவே மாறிவிடும் ஆபத்தும் இருக்கிறது.
பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் பெண்களுக்கு மனப் பதற்றம், மன அழுத்தம், தூக்கமின்மை, பசியின்மை, எரிச்சல், வேலையில் ஆர்வமின்மை, நெஞ்சுவலி, கை, கால், தலைவலி உபாதைகள் போன்றவை ஏற்படலாம். எப்போதும்போல அவர்களால் உற்சாகமாக செயல்பட முடியாமல், எதையோ இழந்ததைப்போல இருப்பார்கள். தேவையற்ற பயம் இருக்கும். தனிமையில் இருக்கவே அதிகம் விரும்புவார்கள். இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களிடம் குடும்பத்தினரும் உறவினர்களும் பேசி அவர்கள் மனதில் இருக்கும் பிரச்னையைத் தெரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அந்த பயத்தில் இருந்து அவர்களை முழுமையாக விடுவிக்க மனநல மருத்துவரால் முடியும். அவசியம் ஏற்பட்டால் அரசின் சார்பில் அமைக்கப்பட்டு இருக்கும் பெண்கள் குற்றத் தடுப்புப் பிரிவின் உதவியையும் அணுகி பிரச்னைகளைத் தீர்க்க முயலலாம்'' என்றார்.
ஆண்டனிராஜ்
படம்: எல்.ராஜேந்திரன், ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்
 பிரச்னைகளைத் தவிர்க்க...
 பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நடக்கலாம். ஆனால் அதனைத் துணிச்சலோடு எதிர்க்கும் குணத்தை பெண்களிடம் உருவாக்க வேண்டும்.
 குழந்தைப் பருவத்தில் அப்பா, அம்மா, சகோதரன், திருமணத்துக்குப் பின் கணவரைத் தவிர வேறு எந்த ஆணாக இருந்தாலும் உள்ளாடை போடும் இடங்களை தொடக் கூடாது. அப்படிச் செய்வது பாலியல் தொந்தரவு என்பதை, குழந்தைப் பருவத்திலேயே பெண்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
 சில ஆண்கள், தேவையற்ற சமயங்களில்கூட தாங்களாகவே முன்வந்து உதவிசெய்வார்கள். சிலர் இரட்டை அர்த்தத்தில் பேசி சிரிக்கவைக்க முயற்சிப்பார்கள். ஒருசிலர் சாதாரணமாகத் தொடுவதுபோல தோளைத் தொட்டுப் பேசத் தொடங்குவார்கள். இவர்களை முதலிலேயே தவிர்த்துவிட வேண்டும்.
 மூன்றாவது நபர்கள், நாம் கேட்காமலே உதவிசெய்ய வந்தால், அதில் வில்லங்கம் இருக்கிறது என்பதை பெண்கள் கவனத்தில்கொள்ள வேண்டும். அதனை முன்கூட்டியே தவிர்ப்பது நல்லது.
 'உங்க புடவை கலர் சூப்பர்... டிசைன் நல்லா இருக்கு’ என்று பேச்சைத் தொடங்கும்போது 'என் புடவை எந்த நிறத்தில் இருந்தால் என்ன சார், வேலையைப் பாருங்கள்’ என்று கறாராக சொல்லிவிட்டால், அடுத்த 'மூவ்’ தவிர்க்கப்படும்.
 அளவுக்கு அதிகமாக உரிமை எடுத்துக்கொண்டு நம்மைக் கவனிக்கும் ஆண்களிடம், பெண்கள் உஷாராக இருக்க வேண்டும். தேவை இல்லாமல் அடிக்கடி போன் செய்தாலும், எஸ்.எம்.எஸ். அனுப்பினாலும் உடனே கண்டிக்க வேண்டும்.
 ஆண் தன்னிடம் தவறாகப் பழகுகிறான் என்பதை, பெண்களால் எளிதாகக் கண்டுபிடித்து விடமுடியும். அப்படித் தெரிந்துவிட்டால், தயவுதாட்சண்யமே பார்க்காமல், 'தப்பு பண்ற... இனி எங்கிட்ட பேசாதே’னு சுருக்கமாக அதே சமயத்தில் துணிச்சலான குரலில் சொல்லிவிட வேண்டும்.
 சில பெண்களுக்கு சிரிக்கவைக்கும் ஆண்களைப் பார்த்து ஈர்ப்பு ஏற்படலாம். அப்படி நடப்பதை உணரத் தொடங்கியதுமே அத்தகைய நட்பை உடனே துண்டித்துவிட வேண்டும். தவறு எந்த பக்கத்திலும் இருந்து வரலாம். ஆனால் பெண்கள் அதிகக் கவனமாக இருந்து தேவையற்ற பழியை சுமக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்,
 அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பணிக்கு தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு, அவர்களை பணி அமர்த்தும் நிறுவனங்களே பாலியல் தொந்தரவு எப்படி ஏற்படலாம் என்பது குறித்தும், அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் பயிற்சி கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

Sunday, August 18, 2013

ஃபிகரை கரக்ட் செய்வது எப்படி?

ஃபிகரை கரக்ட் செய்வது எப்படி?

(அருமையான பதிவு ஆனால் கொஞ்சம் நீண்ட பதிவு முழுவதுமாக படியுங்கள் :P)

நமது தமிழக ஆண் சமூகத்தின் 'லட்சணம்' முகநூலைப் பார்த்தாலே தெரியும். ஃபிகர் (அது போலி ஃபுரபைலாதான் 90% இருக்கும்) ஃபோட்டோக்கு கீழ போய் "ஹாய் யூ லுக் லைக் ஏஞ்சல்'னு போடுறது, 'ப்ளீஸ் ஆட் மீ ஏஸ் யுவர் ஃபிரண்ட்'னு போடுறது, 'ஹேய். வீ வில் பி பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ். வாட் யூ சே'னு எழுதறது. "எங்க பப்பி இன்னைக்கு பாத்ரூம் போகல"னு போட்டா கூட பதறி துடிச்சு லைக்கும் கமண்ட்டும் போடுறது! இப்படிலாம் பசங்களை பசங்களே அசிங்கப்படுத்துனா அப்புறம் ஃபிகருங்க எப்படி பசங்கள மதிக்கும்? சோ.. ஒரு ஃபிகரை கரக்ட் பண்ண என்ன செய்யனும், என்ன செய்யக் கூடாது? அந்த காதல காப்பாத்த என்ன செய்யனும், என்ன செய்யக் கூடாது போன்ற சில முக்கியமான பாயிண்ட்ஸ் மட்டும் சொல்றேன்... உனக்கேன் இந்த அக்கறை? யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். ஆனால் இதை படித்துமுடித்தவுடன் "நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாக பாதிக்கப்பட்டேன்" என்பது உங்களுக்குப் புரியும்! சோ.. தொடர்ந்து படிங்க!

1) "நம்ம முகரைக்கெல்லாம் சுமாரான ஃபிகரு தான் கிடைக்கும்"னு நமக்கு நம்மளே முடிவு பண்ணிட்டு டைரக்டா சுமாரான ஃபிகருக்கு ட்ரை பண்ணக் கூடாது. ஆக்சுவலா எல்லா பசங்களும் இப்படி நினைக்கிறதுனால செம ஃபிகரைவிட தமிழ்நாட்டுல சுமாரான ஃபிகர்களுக்குதான் போட்டி அதிகம். இது நாட்டுக்கே ரொம்ப கேடான விசயம். போட்டி அதிகம்ன்றதால ஒரு சுமாரான ஃபிகர் தன்னத்தானே செம ஃபிகர்னு நினைச்சுக்கக் கூடிய கொடூரமான உயிர்க்கொல்லி அபாயங்கள் இதுல இருக்கு! அப்புறம் அந்த கொடுமையையும் நீங்கதான் அனுபவிக்கனும். எனவே உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்னு எடுத்தவுடனேயே செம ஃபிகரையே ட்ரை பண்ணுங்க. இது அழகை வைத்து காதலிப்போர்க்கு மட்டும் தான்! குணம்-மனம் எல்லாம் பார்ப்பவர்களுக்கு சுமாரான ஃபிகரும் 'ஹேலி பெர்ரி' தான்!

2) ஆரம்பத்துலேயே ரொம்ப அலைஞ்சு அலைஞ்சு உங்க ஃபிகருக்கு திமிரு ஏத்திவுட்றக் கூடாது. ஒருநாள் பாக்கனும், ஒருநாள் பாக்கக் கூடாது. முக்கியமா முதல்தடவ பேசுறப்ப அந்த பொண்ணுக்கு நீங்க செம திமிரு புடிச்சவன், ஈகோ புடிச்சவன்னு தோணனும். அப்பதான் நீங்க அடுத்தடுத்த தடவ பேசுறப்ப 'இவ்ளோ ஈகோ புடிச்சவனா இருந்தும் நம்மகிட்ட பேசுறானே'னு அதை நினைச்சு அதுவே பெருமை பட்டுக்கும்! போகப் போக ஈகோவ குறைச்சு லவ்வை ஏத்தனும்! முதல் தடவயே வான்டட்டா போய் போய் வழிஞ்சீங்கன்னா "சனியன் இப்படி வழியுதே"னு மனசுக்குள்ள முடிவுபண்ணி மொக்க லிஸ்ட்ல சேத்துருவாய்ங்க! அப்புறம் லவ் ஊத்திக்கும்!

3) "மச்சி இந்த ஃபிகர் எனக்கு செட் ஆகுமாடா?"னு வர்றவன் போறவன்கிட்டெல்லாம் அட்வைஸ் கேக்க கூடாது. செட் ஆகும்ன்ற நம்பிக்கையும், மன உறுதியும் இல்லேனா கடைசி வரைக்கும் முரளி மாதிரியே அலைய வேண்டியதான். இன்ஸ்பிரேஷன் வேணும்னா ஒரு பத்து நிமிசம் எக்ஸ்பிரஸ் அவென்யூல போய் நில்லுங்க. அட்டு பிகர்களுக்கு நல்ல பசங்களும், நல்ல பொண்ணுங்களுக்கு அட்டு பசங்களும் கிடைப்பதுதான் நம் ஊர் நியதிம்குறது புரிஞ்சிரும்! அதுனாலதான் சொல்றேன், முகரை சரி இல்லேனாலும் முயற்சி முக்கியம்!

4) பெண்களுக்கு என்ன வேணும்ன்ற கேள்விக்கு அந்தக்கால 'ஆதாம்'மில் இருந்து இந்தக்கால ஆதம்பாக்கம் நாராயணன் வரை பதில் தேடி அலையிறாய்ங்க. ஆனா இதோட பதில் ரொம்ப ஈசி! பெண்களுக்கு எல்லாமே வேணும். ஆனா அப்பப்போ அது அது வேணும். இந்த ஃபார்முலாவை மெயிண்டைன் பண்றதுல தான் ஆண்களுக்குப் பிரச்சினை. காதல் தேவைப்படுறப்ப காமத்தையும், காமம் தேவைப்படும்போது காதலையும், அன்பு தேவைப்படும்போது கோபத்தையும், டெட்டி பியர் தேவைப்படும்போது ஸ்பைடர் மேனையும் மாத்தி மாத்தி கொடுத்தா லவ் புட்டுக்கும்!

5) லவ் செட்டாகுற வரைக்கும் நம்ம ஐ.சி.யூலயே அட்மிட் ஆயிருந்தாலும் அவ கால் பண்ணா ஃபோனை எடுத்து உருக உருக பேசுவோம். செட் ஆயிருச்சுன்னா நிலைமை மாறிரும். நம்ம எதாவது உயிர் போற வேலைல பிசியா இருப்போம். அப்ப ஃபோன் பண்ணி ரொமான்ட்டிக்கா பேசுனு உயிரை எடுப்பாங்க. நமக்கு எரிச்சலும் கடுப்பும் மிக்ஸ் ஆகி வரும். ஆனா உள்ள எவ்ளோ எரிஞ்சாலும் வெளிய காட்டிக்காம ஒரு அஞ்சு நிமிசம் பொறுமையா கொஞ்சிட்டு ஃபோனை வச்சிரனும். இதை செய்யாம, "உனக்கு அறிவில்லையா? அது இது"னு கத்துனீங்கன்னா லவ்வுல விரிசல் விழுந்துரும்! காதல் பிஞ்சுட்டிருக்க கேப்ல பெண்கள் ரொம்ப வீக்! அப்புறம் இதுக்குன்னே உங்க ஃபிகரோட ஃபிரண்ட் எவனாவது காத்துக்கிட்டிருப்பான். கிடைச்ச கேப்புல 'ஆறுதல்' சொல்றேன் பேர்வழினு சொற்பொழிவு ஆத்தி ஆத்தியே உசார் பண்ணிருவாய்ங்க! பல காதல்கள் இப்படிதான் காலி ஆகுது!

6) உங்க ஃபிகரோட ஃப்ரண்டுங்ககிட்ட (பெண் நண்பர்கள்) ரொம்ப கவனமா இருக்கனும். இந்த பசங்க என்னதான் உள்ளுக்குள்ள பொறுமுனாலும் அடுத்தவன் காதலுக்கு ஹெல்ப் பண்ணுவாய்ங்க! ஆனா இந்த பொண்ணுங்க செத்தாலும் அவங்க ஃபிரண்டு லவ்வுக்கு ஹெல்ப் பண்ண மாட்டாங்க. குறிப்பா பையன் அழகா, காமடியா பேசுறவனா இருந்தா அவ்வளவுதான். எப்படா பிரிச்சு விடுறதுனு இருப்பாங்க. அதுனால அதுங்ககிட்ட வாயை அளவோட விடனும்! நீங்க பேசுற எதுவும் உங்களுக்கு எதிராவே நாளை திருப்பப்படலாம்! ஏன்னா வழக்கை அழகாக 'ட்விஸ்ட்' பண்றதுல ஒவ்வொரு ஃபிகரும் ஒரு ராம்ஜெத்மலானி தான்!

7) உங்க ஆளு அவங்க ஃபிரண்ட் (பசங்க)கிட்ட எவ்ளோ பேசுனாலும் கண்டுக்காதீங்க. ஏன்னா லவ் பண்ணிட்டிருக்கப்ப பொதுவா பொண்ணுங்க தப்பு பண்ண மாட்டாங்க. அவங்க லிமிட்ல கரக்டா இருப்பாங்க. அதுனால சும்மா, "அவன்ட்ட பேசாத இவன்ட்ட பேசாத"னு மொக்க போட்டீங்கன்னா அப்புறம் அவங்க ஃபிரண்ட் கூட பேசுறப்ப, "சே... இவன் எவ்ளோ அப்பாவியா இருக்கான். இவன்கூட நம்மளை சேத்து சந்தேகப்பட்டுட்டானே"னு உங்க மேல கோபமும், ஃபிரண்டு மேல சிம்பதியும் வந்து தொலைச்சுரும்! அப்புறம் காலப்போக்குல அது முத்திப் போயி காதலா கூட மாற வாய்ப்பிருக்கு! அதுபோக அந்த காதலுக்கு விதை நீங்க போட்ட மாதிரியும் ஆயிரும்! இந்த அவமானம் நமக்கு தேவையா? அதுனால சந்தேகப்படுறவன் காதலிக்க கூடாது. காதலிக்கிறவன் சந்தேகப்படக் கூடாதுங்குறதை கரக்டா ஃபாலோ பண்ணனும்.

7.2) அதுக்காக, "நீ எவன்கூட வேணாலும் எவ்ளோ நேரம் வேணாலும் பேசுடா செல்லம்... நான் எழவு காத்துட்டு உக்காந்திருக்கேன்"னு இருந்தீங்கன்னா, "என்ன இவன்? நம்மமேல பொசசிவ்நெஸ்சே இல்லாம இருக்கான். நம்மளை இவன் உண்மையா லவ் பண்ணலையோ"னு தோண ஆரம்பிச்சிரும். அப்புறம் அதுவும் பிரச்சினை. அதுனால உண்மைலயே உங்களுக்கு சூடு, சொரணை எதுவுமே வரலேனா கூட கொஞ்சமா கோபப்பட்டுக்கனும். லிமிட் ரொம்ப முக்கியம்!!

 உங்களை லவ் பண்ற பாவத்துக்காக உங்க ஆளுக்கு தனிப்பட்ட வாழ்க்கையே இருக்க கூடாது, எங்க போனாலும் உங்க கூடதான் போகனும், எப்ப பாத்தாலும் உங்க கூடதான் இருக்கனும்னு 'அடம்' புடிக்கக் கூடாது. அவங்க ஃபிரண்ட்சோட, கூட வேலை பாக்குறவங்களோட வெளிய போறது, சினிமாக்கு போறதையெல்லாம் புடிக்கலேனாலும் புரிஞ்சுதான் ஆகனும். அதைவிட முக்கியம் வெளிய அவங்க ஊர் சுத்திட்டு வந்தோன அந்த கதையெல்லாம் சொல்றேன் பேர்வழினு ஒரு கொடூர மொக்கை போடுவாங்க. அதை காது கொடுத்து கேக்குற பெருந்தன்மையும் இருக்கனும். நல்லா தெரிஞ்சுக்கங்க... பெண்களுக்கு பேசுறவனைவிட, கேக்குறவனை ரொம்ப புடிக்கும்! ஏன்னா பெண்களுக்கு பேச ரொம்ப புடிக்கும்!

9) உங்க ஆளோட அண்ணன் ஒரு 'டொக்கு டோங்கிரி'யா இருப்பான். அப்பன் ஒரு காமடி பீஸா இருப்பாரு. ரெண்டு பேருமே, உங்க ஆளு எந்த காலேஜ்ல படிக்குதுனு கூட தெரியாத, என்ன ஆனாலும் கண்டுக்கவே கண்டுக்காத மன்மோகன்சிங்கா இருப்பாய்ங்க. ஆனா, "எங்கப்பா அபியும் நானும் பிரகாஷ்ராஜ் மாதிரி" , "எங்கண்ணன் தங்கைக்கோர் கீதம் டி.ஆர் மாதிரி"னு அப்பப்ப உங்க ஆளு அடிச்சு விடும். உண்மை உங்களுக்கு தெரிஞ்சாலும் மனசுக்குள்ளயே புதைச்சிக்கிட்டு, "எனக்கு இப்படி ஒரு அப்பா கிடைக்கலையே. எனக்கு இப்படி ஒரு அப்பத்தா கிடைக்கலையே"னு ஃபீல் பண்ற மாதிரி அடிச்சு விடனும். ஏன்னா முக்கால்வாசி ஃபிகருங்க வீட்டை ஏமாத்துறோமேனு ஒரு குற்ற உணர்ச்சியோடயேதான் லவ் பண்ணும்ங்க. அதை சரிகட்டதான் அப்பப்ப அப்பாவையும், அண்ணனையும் புகழ்றது! இது தெரியாம நீங்க "உங்கப்பன் கிடக்கான் தண்டம். உங்கண்ணன் கிடக்கான் முண்டம்'னு உண்மைய பேசுனீங்கன்னா காதல் காலி ஆயிரும்!

10) சாம தான பேத தண்டம் முறைகளை எல்லாம் கடைபுடிச்சும் அந்தக் காதல் புட்டுக்குச்சுனு வைங்க. "செத்துருவேன், கைய வெட்டிக்குவேன், நாக்க புடுங்கிக்குவேன்"னு அடம்புடிக்கப்படாது. காதலை 'break up' செய்ய அவங்களுக்கு எல்லா உரிமையும் (தவறான காரணமாக இருந்தால் கூட) இருக்குன்றதை புரிஞ்சு நாகரீகமா சமாதானப் படுத்த ட்ரை பண்ணா திருப்பி அதே காதல் கிடைக்க வாய்ப்பு இருக்கு. நம்மளே நாளைக்கு நம்ம காதல் தோல்விய நினைச்சுப் பாக்குறப்ப 'காதலி'யை குற்றம் சொல்ற மாதிரி இருக்கனுமேயொழிய நம்மளை நினைச்சு நம்மளே கேவலப்படுற மாதிரி இருக்கக் கூடாது. ஏன்னா நல்ல காதலனா இருக்கோமான்றதை விட நல்ல மனுசனா இருக்கோமான்றதுதான் முக்கியம்!

என்ன செஞ்சும் உடைஞ்ச லவ்வை ஒட்ட வைக்க முடியலைனா காதலை நியாபகப்படுத்தும் எல்லா விசயங்களில் இருந்து ஒதுங்கி இருக்கனும், தூக்கி எறிஞ்சிரனும். ஒரு விலை உயர்ந்த காரை நம்மளால வாங்க முடியலேனா தினமும் அந்த கார் கடைக்கு போய் அது அங்க நிக்குதா? எவன் வாங்குனான்? நல்லா வச்சிருக்கானா?னு பாக்குறது நமக்குதான் மேலும் மேலும் பிரச்சினை. கார் அதுபாட்டுக்கு கிளம்பி போயிரும். நமக்குதான் வலியும் வேதனையும். அதுனால கிடைக்கலேனா அந்தப் பக்கமே போகக் கூடாது!! "காதல்னா பூ மாதிரி. உதிர்ந்தா ஒட்ட வைக்க முடியாது"னு மொக்க டயலாக் பேசாம நமக்கான காதல், காதலி இது இல்லப்பானு அடுத்த காதலுக்காக காத்திருக்க ஆரம்பிச்சிரனும். வாழ்க்கையின் எதார்த்தம் அதான். அப்படி வாழ்க்கையை எதார்த்தமா வாழ்றவன் காதல்ல மட்டுமில்ல எல்லாத்துலயுமே ஜெயிப்பான்! ஆல் தி பெஸ்ட்! 

Saturday, August 17, 2013

மதம்

அன்புள்ள அம்மா—
எனக்கு 28 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. என் கணவரும், நானும் ஜாதி, மதம், மொழி, மாநிலம் இவற்றால் வேறுபட்டவர்கள். பதிவு திருமணம் செய்து கொண்டோம்.
மதம் மாறுவதில், அதிலும் திருமணத்துக்காக மதம் மாறுவதில் சிறிதும் நம்பிக்கை இல்லை. அன்பையும், வாழ்க்கையையும் பகிர்ந்து கொண்டோம். மதத்தை ஒருவர் மீது மற்றவர் திணிப்பதை வெறுத்தோம். 
அதனால், எங்கள் பிள்ளைகளையும் அவர்களாக ஒரு மதத்தை சம்மதத்துடன் ஏற்றுக் கொள்ளட்டும் என்று வளர்த்து விட்டோம். 
மகள், மகன் முறையே 26, 20 வயது உடையவர்கள். இவர்களை கல்லூரியில் சேர்த்த போது, "மதம்' என்ற வெற்றிடத்தை அப்ளிகேஷன் பாரத்தில் பூர்த்தி செய்ய வேண்டிய நிர்பந்தமான சூழ்நிலையில், அவர்களது தந்தையின் மதத்தின் பெயரை குறிப்பிட்டோம். 
ஆனால், அவர்கள் இருவரும் எந்த மதத்தையும் பின்பற்றாமல் மனதளவில் நல்லவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர் களுக்கு திருமணம் என்று வரும்போது, மதம் என்ற பிரச்னை பெரிதாக தோன்றுகிறது.
மேலும், இத்தனை ஆண்டு நாங்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்து விட்டோம். இப்போது, எங்கள் மரணம் என்ற தவிர்க்க முடியாத விஷயம், என் மனதில் சஞ்சலத்தை கொடுக்கிறது. சாவை கண்டு பயம் அல்ல. என் கணவரும், நானும் சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்கள்.
எங்கள் திருமணம் சட்டபூர்வமானது தான். ஆனால், எங்கள் மத குருக்களும், மற்றவர்களும் அங்கீகரிக்க மாட்டார்கள். இதனால், நாங்கள் இறந்து போன பிறகு எங்கள் உடல்களை வைத்து, இறுதி சடங்குகளில் எங்கள் இருவரது மதத்தினரும் குழப்பம் செய்யக்கூடும் என்று அஞ்சுகிறேன்.
நாங்கள் இறந்த பின், உயிருடன் இருக்கும் எங்களது குடும்பத்தினருக்கு தொல்லை இருக்கக் கூடாது என்பது எங்கள் விருப்பம். எங்கள் மரணத்துக்குப் பின் எங்கள் உடலை எப்படி, அடக்கம் செய்யலாம் என்று ஆலோசனை கூறுங்கள். 
நாங்கள் யாரை அணுக வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை. தயவு செய்து உதவி செய்யுங்கள்.
— அன்புடன் சகோதரி.
பின்குறிப்பு:

இந்த விஷயத்தை பற்றி எங்களது நண்பர்களிடம் பேசினோம்... "இதை, அன்றே நினைத்து பார்த்திருக்க வேண்டும்...' என்பது போன்று தான் சொல்கின்றனர். வாழ்க்கையை தொடங்கிய நேரத்தில், மரணத்தை பற்றி அதிகமாக நாங்கள் நினைக்கவில்லை என்பது உண்மைதான்.

அன்பு சகோதரிக்கு —
உங்கள் கடிதம் கிடைத்தது. நீங்களும் உங்கள் கணவரும், கலப்பு திருமணம் செய்து கொண்டதா கவும், இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்வதாகவும் எழுதியிருக்கிறீர்கள். 
இருந்துமே தங்களது ஜாதியை அடுத்தவருக்கு வற்புறுத்தாமல், குழந்தைகளிடமும் திணிக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, மரணத்திற்கு பின் புதைப்பரா, எரிப்பரா... எந்த மத அடிப்படையில் ஈமக் கிரியைகள் நடக்கும் என்பது பற்றி என்ன கவலை?
சகோதரி, மற்றவர்களைப் போல் நாமும் ஏதோ ஒரு மதத்தை பின்பற்றிதான் ஆக வேண்டும். அப்போது தான் நாம் இறந்த பிறகு நம்மை நல்லடக்கம் செய்ய, இரு மதத்தில் ஒன்றாவது முன் வரும் என்பதெல்லாம், தேவையில்லாத கவலை என்று தான் நான் சொல்வேன்.
உங்களுக்கு ஒன்று தெரியுமா? திருமணத்தின் போதும், குழந்தை பிறப்பின் போதும் தான், எந்த ஜாதியின் அடிப்படையில் திருமணம் செய்விப்பது... குழந்தைக்கு பெயர் வைப்பது போன்ற பிரச்னைகள் கிளம்பும். எல்லாரும் ஆளுக்கு ஒரு பக்கம் திரும்பி, முறைத்தபடி நிற்பர்.
ஆனால், ஒரு மனிதன் இறந்து விட்டால், அத்தனை பேருமே அடுத்தாற்போல, சடலத்தை எப்போது எடுப்பது என்பதில்தான் தீர்மானமாக இருப்பர். அதிக நேரம் காக்க வைக்க மாட்டார்கள்.
அப்படி இரு மதத்தினருக்கும் பிரச்னை வந்தால், அருகிலிருக்கும் சுகாதார மையத்திற்கு தகவல் தெரிவித்தால், அவர்கள் எடுத்து போய் உடலை எரிப்பதோ, புதைப்பதோ, ஏதோ ஒன்றை செய்து விடுவர்.
அப்படி ஏதோ ஒன்றை எந்த மதத்தின் அடிப்படையில் செய்ய வேண்டும் என்று ஏன் கவலைப்படுகிறீர்கள். வாழ்கிற நாளெல்லாம் உங்களை மதமா காப்பாற்றுகிறது? மனிதம் ஒன்றே புனிதம் என்றுதானே நெஞ்சை நிமிர்த்தி வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்... நாம் இறந்த பிறகு, நமக்குள் இருந்த ஜீவன், மேலும் இருக்கப் போகிறதா அல்லது காற்றோடு கரைந்து விடப் போகிறதா என்பது இதுவரையில் யாருமே கண்டுபிடிக்காத புதிர்.
ஆன்மா என்று ஒன்று இருக்கிறது. அதற்கு, இது போன்ற இறுதி சடங்குகளும், சம்பிரதாயங்களும் செய்தால் தான், அது இறைவனிடம் போய் சேரும் என்று நீங்கள் கருதினால், அந்த இறைவன் இப்போது கூட உங்களுக்கு வெகு சமீபத்தில் தான் இருக்கிறார். 
வாழ்க்கை முழுவதும் அன்பிலேயே குளித்து எழுந்த ஜீவனுக்கு, ஆண்டவனிடம் போய் சேர மதம் என்கிற, "விசா' தேவையில்லை. அப்படிப்பட்ட மத சடங்குகள் இல்லாவிட்டாலும் நல்லவர்களின் ஆன்மா, தன்னை சுற்றியுள்ளவர்கள் நல்லபடி இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கும்; வாழ்த்தும்.
வேண்டுமானால் ஏதோ ஒரு தொகையில் உங்கள் இறப்பிற்கு பின் அன்னதானம் செய்வதற்கோ, மருத்துவ உதவிக்கோ, கல்விக்கோ, நீங்கள் ஒதுக்கலாம். இதுவே மிகச்சிறந்த வழி. எல்லா மதமும் இதையே வலியுறுத்துகின்றன.
உங்கள் குழந்தைகள் இருவருமே உங்களைப் போலவே அவரவர்களுக்கு பொருத்தமான, பிடித்த துணையை தேடிக் கொள்ளட்டும். அக்காலத்தில் உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் இருந்த துணிச்சலில் கொஞ்சமாவது அவர்களுக்கு இருக்காதா! 
எல்லாவற்றையும் நான்தான் செய்ய வேண்டும் என்றும், நான் இறந்த பிறகு நம்மை என்ன செய்வர் என்றும் அனாவசியமாக கவலைப்படுவதை விட்டு வாழ்க்கையை அனுபவியுங்கள்.
காக்கைகளும், குருவிகளும், நாய்களும், பூனைகளும் இந்த கவலையெல்லாம் இல்லாமல் எத்தனை சந்தோஷமாக இருக்கின்றன...
மரணத்தை இப்போதிருந்தே ஆரத்தி கரைத்து வரவேற்க வேண்டாம்!
வாழ்தலில் பற்று வையுங்கள்; வாழ்த்துகள்!